16 20
ஏனையவை

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு – அச்சத்தில் அரசியல்வாதிகள்

Share

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு – அச்சத்தில் அரசியல்வாதிகள்

உயர் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்டவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கண்டியை சேர்ந்த மதுபான சில்லறை வர்த்தகர்களான சாமர சம்பத் அபேசேகர மற்றும் என்.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்இ மதுவரிச்சட்டத்தை மீறி மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, மதுவரித் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, நிதி அமைச்சின் செயலாளர், அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 39 பேரின் பெயர்கள் பிரதிவாதிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் செப்டம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், பிரதிவாதிகள் மதுவரிச் சட்டத்தை மீறி பல மதுபான உரிமங்களை வழங்கியுள்ளனர் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுவரிச் சட்ட விதிகளை தவிர்த்து தன்னிச்சையாகவும், அநீதியான முறையிலும் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் கீழ், கடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளனர்.

அதேநேரம் முறையான வெளிப்படைத்தன்மையின்றி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் செப்டம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், பிரதிவாதிகள் மதுவரிச் சட்டத்தை மீறி பல மதுபான உரிமங்களை வழங்கியுள்ளனர் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுவரிச் சட்ட விதிகளை தவிர்த்து தன்னிச்சையாகவும், அநீதியான முறையிலும் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் கீழ், கடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளனர். அதேநேரம் முறையான வெளிப்படைத்தன்மையின்றி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26 முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரையில் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனுவின் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மேலும், குறித்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

அத்துடன், இந்த நடவடிக்கையின் மூலம் கலால் திணைக்களத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.

Share
தொடர்புடையது
1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...

ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...