22 8
ஏனையவை

எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

Share

எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

குறித்த நடவடிக்கைகள் நேற்றும் (19) இன்றும் (20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துவதற்கு தேவையான வசதிகளை இலகுபடுத்தும் விதமாக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் பயனுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குதல், உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டத்தை நடத்துவது தொடர்பான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, இணையவழி முறை (Online) ஊடாக உரிய தகவல்களை உள்ளீடு செய்யும் வசதியும் இம்முறை வழங்கப்பட்டிருந்தது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளையதினம் (21) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...