4 1 1
ஏனையவை

தமிழ் தேசிய வாக்குகளை உள்ளீர்த்தார்களா அநுர தரப்பு! அளிக்கப்பட்ட விளக்கம்

Share

தமிழ் தேசிய வாக்குகளை உள்ளீர்த்தார்களா அநுர தரப்பு! அளிக்கப்பட்ட விளக்கம்

யாழில் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம்.

யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக வந்துள்ளது. இது தேசிய மக்கள் சக்தியே எதிர்பாக்காத வெற்றியாகும்.

வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை. தமிழ்த் தேசிய வாக்குகளுக்கு வெளியே இருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...