11 14
ஏனையவை

தேசியப் பட்டியல் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Share

தேசியப் பட்டியல் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கான அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழு வழங்குமாறு கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி நாளை (17) தனது கட்சியின் தேசியப் பட்டியலை அறிவிக்க உள்ளது.

மேலும் இந்த ஆண்டு தேசிய பட்டியலில் இருந்து 05 நாடாளுமன்ற பதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியதாகவும், அதற்காக யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி 02 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவிகளை கைப்பற்றியுள்ளதுடன், அந்த நாடாளுமன்ற பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்ததோடு, அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவை நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது.

இம்முறை புதிய கட்சியாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட சர்வஜன அதிகாரம் ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவியையும் வென்றுள்ளது.

இதன் படி, குறித்த கட்சியின் தேசிய செயற்குழு நாளை (17) கூடி தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் தலா ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் எனப் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தனது தேசியப் பட்டியல் உறுப்பினர் யார் என்பதை நாளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அறிவிக்கப் போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...