2 38
ஏனையவை

தாஜூடீனை கொலை செய்தது யார்! நாமலின் கருத்தால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

Share

தாஜூடீனை கொலை செய்தது யார்! நாமலின் கருத்தால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் கிளீன் ஸ்ரீலங்கா விவாதத்தின் போது கருத்து தெரிவித்த மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கருத்துக்கள் ஆளும் தரப்பில் பெரும் வாத பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

நாடாளுமன்றில் இன்றைய உரையின் போது நாமல் ராஜபக்ச, ”முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு கிளீன் ஸ்ரீலங்கா என பெயரிடப்பட்டாலும் அது கோட்டபாய ராஜபக்சவின் எண்ணக்கருக்களை கொண்டமைந்துள்ளது.

இந்த திட்டத்தில் முதலாவதாக, முச்சக்கர வண்டியின் சாரதிகளும், பேருந்து உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

விபத்துக்களை ஏற்படுத்தும் அலங்கார பொருட்களை அகற்றவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

ஆனால் அந்த நடவடிக்கை தற்போது செயலிழந்துள்ளது. இது நிரந்தரமில்லாத திட்டமிடல் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மக்களுக்கான நிரந்தரமான திட்டத்தை முன்வையுங்கள். இது இன்று நிரந்தரம் இல்லாது போயுள்ளது.

மேலும் ராஜபக்சர்கள் மீது போலியான விசாரணைகள் இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் பலிவாங்கல் நடவடிக்கை. இது நீதிக்கு புறம்பானது” என நாமல் குற்றம் சுமத்தினார்.

இதன்போது குறுக்கிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர், எமது விசாரணைகள் போலியானவை அல்ல. தாஜூடீனை கொலை செய்தது யார்? அதேபோல லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யார்?

அந்த உண்மைகளை இந்த நாடே அறியும்” என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாமல்,

“இந்த காலப்பகுதியில் தற்போதையை பொது பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பான பதவியில் இருந்தார். அப்போது நீங்கள் முன்வைக்கும் இந்த குற்றச்சட்டுகளுக்கு என்ன ஆனது? என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...