மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, முடிவு வரும் என தெரியும்- சீரியல் நடிகை மகாலட்சுமி வருத்தமான வீடியோ

untitled design 37 1 16629823644x3 1

மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, முடிவு வரும் என தெரியும்- சீரியல் நடிகை மகாலட்சுமி வருத்தமான வீடியோ

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் நடிகை மகாலட்சுமி.

பல சீரியல்களில் முக்கிய கேரக்டரிலும் சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் என்னவோ காதலித்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டாலும் ரசிகர்கள் மிகவும் பரபரப்பாக பேசி வந்தார்கள். ஆனால் இவர்கள் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள் என கமெண்ட் செய்பவர்களும் உள்ளார்கள்.

மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, முடிவு வரும் என தெரியும்- சீரியல் நடிகை மகாலட்சுமி வருத்தமான வீடியோ
Serial Actress Mahalakshmi Emotional Video

இந்த நிலையில் சீரியல் நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அன்பே வா சீரியல் முடிவடைகிறது என்ற தகவல் எங்களுக்கு மிகவும் சோகமாக இருக்கிறது.

எப்படி இருந்தாலும் ஒரு நாள் சீரியலுக்கு முடிவு வரும் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் வருத்தத்தோடு என்னுடைய மனதை தேற்றி கொண்டிருக்கிறேன். நான் இந்த சீரியலுக்கு இடையில் தான் வந்தேன்.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். வாசுகி என்ற கேரக்டர் என் மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு கேரக்டராக இருக்கிறது.

என்னுடைய கேரக்டருக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்பது மிகப்பெரிய விஷயம். இதேபோல இன்னொரு கேரக்டர் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அடுத்த சீரியலில் உங்களை நான் சந்திக்கிறேன் என்று மகாலட்சுமி வீடியோவில் கூறி இருக்கிறார்.

Exit mobile version