24 66c90caef2126
ஏனையவை

இலங்கையில் ஐந்தே மாதங்களில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது

Share

இலங்கையில் ஐந்தே மாதங்களில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

20 விசேட காவல்துறை குழுக்கள் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன் படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு நேரடியாக ஆதரவு, திட்டமிடல் மற்றும் உதவி செய்ததற்காக 3,411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான உத்தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...