tamilni 71 scaled
ஏனையவை

கொழும்பில் நள்ளிரவில் இடம்பெற்ற பயங்கரம்!

Share

கொழும்பில் நள்ளிரவில் இடம்பெற்ற பயங்கரம்!

கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று(03) நள்ளிரவு 12: 29 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திடீரென உணவகத்திற்குள் நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் பொல்லுகளால் உணவகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.

உணவகத்திற்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நுழைந்த விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அந்த கும்பல் உணவக உடைமைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பயத்துடன் வெளியே செல்வதும் அந்த சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த உணவகத்தை பயன்படுத்துவது தொடர்பாக உரிமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு ஆர்மர் வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...