மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் இதனை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முந்தைய சாதனையை முகமது முய்சு முறியடித்தாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
46 வயதான முய்சு, நேற்று(3) சனிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு மரதன் செய்தியாளர் சந்திப்பை ஆரம்பித்தார்.
அது 14 மணி நேரம் 54 நிமிடங்கள் பிரார்த்தனைக்காக சுருக்கமான இடைநிறுத்தங்களுடன் தொடர்ந்ததாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பு, நள்ளிரவையும் தாண்டியும் நீடித்தது.
இதன்போது, ஜனாதிபதி முய்சு தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் என்றும் அவரின் அலுவலகம் கூறியுள்ளது.
ஏற்கனவே 2019 ஒக்டோபரில், உக்ரைனின் தேசிய பதிவு நிறுவனம், ஜெலென்ஸ்கியின் 14 மணி நேர செய்தியாளர்; சந்திப்பு, பெலாரிஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோ நடத்திய ஏழு மணி நேரத்திற்கும் மேலான முன்னைய சாதனையை முறியடித்ததாகக் கூறியிருந்தது.
இந்தநிலையில் மாலைத்தீவின் ஜனாதிபதி தமது நீண்ட அமர்வின் போது, செய்தியாளர்கள் மூலம் பொதுமக்கள் சமர்ப்பித்த கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.