கீர்த்தி சுரேஷ் காதலர் இவர்தான்.. போட்டோவுடன் அவரை பற்றி முழு விவரம் இதோ
நடிகை கீர்த்தி சுரேஷ் 32 வயதாகும் நிலையில் எப்போது திருமணம் என்று தான் அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வந்தனர். திருமணம் பற்றிய கிசுகிசுக்கள் வந்தபோதெல்லாம் அது வதந்தி என அவரது குடும்பம் விளக்கம் கொடுத்து வந்தது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 11ம் தேதி கீர்த்திக்கு திருமணம் கோவாவில் நடைபெற இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கீர்த்தியின் காதலர் பெயர் ஆண்டனி தட்டில். கீர்த்தி சுரேஷ் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே அவர்கள் காதலித்து வருகிறார்களாம்.
15 வருட காதலுக்கு பிறகு அவர்கள் தற்போது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்டனி சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறாராம்.