25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

Share

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.

கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

வளலாய் மேற்கு, அச்சுவேலி பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...

MediaFile 1 2
ஏனையவை

யாழ் – பண்ணைக் கடலில் சோகம்: நீராடச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 7) மாலை நீராடச் சென்ற கொக்குவில்...

DSC 4424
ஏனையவை

சிவனொளிபாதமலைக்கு ஹட்டன் வழியாகப் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சீரற்ற காலநிலை காரணமாக, சிவனொளிபாத மலைக்கு (Sri Pada/Adam’s Peak) செல்வதற்கான ஹட்டன் அணுகல் வீதியிலுள்ள...

images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...