10 24
ஏனையவை

புதிய எம்.பிக்களுக்காக தகவல் சாளரம் : வெளியான அறிவிப்பு

Share

புதிய எம்.பிக்களுக்காக தகவல் சாளரம் : வெளியான அறிவிப்பு

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20) தகவல் சாளரம் ஒன்று நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.

இந்த சாளரம் இன்றும் நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் திறந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ள தகவல் ஆவணங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படங்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகளை எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பில் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவிக்கையில், “அன்றைய தினம் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்து அல்லது நிகழ்நிலையில் எமக்கு தகவல் வழங்கி பதிவு செய்துக் கொள்ளலாம்.

கைரேகைகளை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் இந்த வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் நடைமுறை, நடத்தை மரியாதை மற்றும் எவ்வாறு செயல்பட வேண்டும்  குழுக்களின் வடிவம் மற்றும் விவாத விதிகள் மற்றும் அவர்கள் பின்பற்றும் முறைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க மூன்று நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...