20 8
ஏனையவை

மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஐ.எம்.எப் பிரதிநிதிகள்

Share

மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஐ.எம்.எப் பிரதிநிதிகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி (CBSL) அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திப்பதற்கும் இந்த குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலின் நிறைவில், குறித்த பிரதிநிதிகள் குழு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிடவுள்ளனர்.

விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (17) நாட்டை வந்தடைந்தது.

இந்த விஜயத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் நான்காவது தவணை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட கால நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...