5 36
ஏனையவை

மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச வந்த நபரால் பதட்டநிலை

Share

மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச வந்த நபரால் பதட்டநிலை

வவுனியாவில் (Vavuniya) மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்படதுடன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (16.11.2024) மாலை வவுனியா – தாண்டிக்குளம், குளப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மரச்சாலையில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொதியுடன் தாண்டிக்குளம் குளத்து பகுதிக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்த இளைஞர்கள் சிலர் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன், அந்த பகுதி கமக்காரர் அமைப்பிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கமக்காரர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விடயம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மற்றும் சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மலர்சாலையின் உரிமையாளர் வரும்வரையில் வாகனத்தை நகரவிடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை செய்து குற்றவாளியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து அகன்று சென்றனர். இதேவேளை குறித்த கழிவுகளை வவுனியா கண்டிவீதிக்கு அண்மையில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் இருந்தே எடுத்து வந்ததாக அதனை கொண்டுவந்த நபர் பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் அவர் கொண்டு வந்த கழிவுப்பொதிகளுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...