முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

2024 11 25 Pudukkudiyiruppu MV 2

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும் நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 275 மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னதாக, மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மாவீரர்களின் பொதுத் திருவுருவப் படத்திற்கு மூத்த உறுப்பினர் காக்கா அண்ணர் சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் நினைவுப் படத்திற்கு அன்னை அறக்கட்டளையின் பணிப்பாளர் நந்தன் சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து மலர் வணக்கம் நடைபெற்றது.

நினைவுரைகளைத் தொடர்ந்து, மாவீரர்களின் பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பழமரக்கன்றுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Exit mobile version