1200870 world 01
உலகம்ஏனையவைசெய்திகள்

மர்ம நபர்களின் திடீர் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பரிதாப பலி, மூவர் கவலைக்கிடம்

Share

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதி Sadda Bazzar.

இங்கு திடீர் துப்பாக்கிச்சூடு நடந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் மற்றும் பயணிகள் கோச் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். எந்த அமைப்பும் இந்த வன்முறை செயலுக்கு உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.

எனினும், பொலிஸார் இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய நபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைபர் பக்துன்க்வா பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் இது மற்றுமொரு சம்பவமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் (2023) மட்டும், இப்பகுதி 419 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது. இதில் 620 பேர் உயிரிழந்தனர் மற்றும் 977 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...