கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் செல்வங்கள்: மீட்டு வர களமிறங்கும் அநுர அரசு

2 31

கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் செல்வங்கள்: மீட்டு வர களமிறங்கும் அநுர அரசு

நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் மீட்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்தோடு, மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கும் மாபியாக்களுக்கு இனிமேல் அவர்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் போகும் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் மக்கள் குறைந்த விலையிலும் தட்டுப்பாடு இன்றி பொருட்களையும் வாங்கக்கூடிய சந்தை உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version