ee
ஏனையவை

அநுர அரசாங்கம் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கிறது! கருணாகரம் பகிரங்கம்

Share

அநுர அரசாங்கம் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கிறது! கருணாகரம் பகிரங்கம்

தற்போது ஆட்சி அமைத்துள்ள அநுர அரசாங்கம் தமிழ் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சனைகளையும் அழித்துக் கொண்டு செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(Govinthan Karunakaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியிலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட எனக்கும் எனது குழுவினருக்கும் ஆதரவு நல்கிய தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்.

இது எமக்கு தோல்வி அல்ல, எமக்கு ஏற்பட்ட சிறு சறுக்கலே ஆகும். இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று மீள் எழுச்சி பெறுவது எங்களது நோக்கமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்காக இணைந்து போட்டியிட்டோம், அந்தவகையில் எங்களுக்கு கணிசமானளவு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இணைந்து செயற்படாவிட்டால் தமிழ் தேசியம் விட்டுப்போகும் என்பதை சிந்தித்து அனைவரும் செயற்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடனும் தமிழ் மக்களுடனும் தமிழ் கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டனர். அதேபோன்று அவர்களது ஆட்சி வேறு விதமாக இருந்தது.

தற்போது ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் அதன் ஜனாதிபதி மற்றும் அதன் கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சினைகளையும் கறையான் அரிப்பது போன்று உள்ளால் அழித்துக் கொண்டு செல்கின்றது.

எனவே எங்களது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

இல்லாவிட்டால் எமது மக்களின் எதிர்காலம் சூனியமாகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...