சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் எல்லை கடந்து பணி செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு
பணி நிமித்தம் எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஜெனீவா மாகாணத்தைப் பொருத்தவரை, பணி நிமித்தம் எல்லை கடந்து மாகாணத்துக்குள் நுழைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2022இல் 100,000ஆக இருந்த பணியாளர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சுமார் 109,000ஆக உயர்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்குள் எல்லை கடந்து பணி செய்ய வருவோரில் 28 சதவிகிதம் பணியாளர்கள் ஜெனீவாவுக்குத்தான் வருகிறார்கள்.
மாகாண புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணியாளர்கள் எண்ணிக்கை, சற்று குறைந்ததாக தெரிவித்தாலும், அது வெறும் 0.3 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment