7 12
ஏனையவை

யாழ். மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல் மரணங்கள் – இளம் குடும்ப பெண் பலி

Share

யாழ். மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல் மரணங்கள் – இளம் குடும்ப பெண் பலி

யாழ். (Jaffna) மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழந்ததுடன் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஐந்து நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் ரஞ்சிதா (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். காய்ச்சல் நிற்காததை அடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.

இதன்போது அவர் அங்கு மயங்கி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன

மேற்படி பெண்ணின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.

எனினும், எவ்வாறான நோயால் அவர் உயிரிழந்தார் என்பது கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

இதேவேளை, திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான நோய் நிலை காரணமாக 23 வயதான யுவதி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...

ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...