8 40
ஏனையவை

விவசாயிகளின் உரமானியம் – அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Share

விவசாயிகளின் உரமானியம் – அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

உர மானியப் பணத்தை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kumari Wijeratne Kaviratne) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கருத்து வெளியிடுகையில், பெரும்போகத்துக்கு தேவையான உரத்தைப் பெற 25,000 உர மானியம் அரசால் வழங்கப்படுகிறது.

இந்த உர மானியம் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படும் என அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பல சந்தர்ப்பங்களில் கூறியும் இதுவரை எந்த ஒரு நபரின் வங்கிக் கணக்கிலும் பணம் வைப்பிலிடப்படவில்லை.

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ளன.

வெற்றிகரமான அறுவடையைப் பெற, நெல் பயிரிடப்பட்டு 14 நாட்களில் உரமிட வேண்டும். மானியம் இல்லாததால் உரங்களை வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...