கட்டுநாயக்கவில் கைதான எட்டு வெளிநாட்டவர்கள்

13 15

கட்டுநாயக்கவில் கைதான எட்டு வெளிநாட்டவர்கள்

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த எட்டு பங்களாதேஷ் பிஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(18.11.2024) இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வீசா இன்றி சிலர் தங்கி இருப்பதாக காவல்தறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க காவல்துறையினர் மேற்கொண்ட வருகின்றனர்.

Exit mobile version