ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனை நிலையம் முடக்கம்: பெண் கைது; ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணம் பறிமுதல்

ice drug arrested

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை நிலையமாகச் செயற்பட்டு வந்த வீடு ஒன்றை ஏறாவூர் பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 5350 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்த போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்ட ரூபாய் 3 இலட்சத்து 61 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளது.

மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், ஏறாவூர் முதலாம் பிரிவில் உள்ள கலைமகள் பாடசாலை வீதிக்கு அருகில் உள்ள இந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதான பெண் வியாபாரியே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை இன்றைய தினம் (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version