இது எந்த வகையில் நியாயம்.. தனுஷை குற்றம்சாட்டிய நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் பதிலடி
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம்.
இவர் இன்று ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது திருமண வீடியோவில் நானும் ரவுடித்தான் பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டு 2 வருடங்கள் ஆனது, அதனால் அப்பட பாடல்கள் இல்லாமல் ஒரு சின்ன வீடியோவுடன் வெளியிட்டதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டிருப்பது தனுஷின் எண்ணத்தை காண்பிக்கிறது என பெரிய அறிக்கை வெளியிட்டார்.
நயன்தாரா அறிக்கை இப்போது பரபரப்பாகி வர அவரை கேள்வி கேட்டு இயக்குனர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்து விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம் என கேட்டுள்ளார்.