நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

1717386794 images

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் மொத்தம் 40,392 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரஷீலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version