6 40
ஏனையவை

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் கனடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி

Share

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் கனடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை (Sri Lanka) தமிழர் ஒருவருக்கு கனடிய (Canada) அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் கனடிய குடிவரவு மற்றும் குடியகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட தேசிங்கராசன் ராசையா என்பவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமையே இவ்வாறு சர்ச்கைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த நபர் தொடர்பில் விசாரணை செய்த போது அவரிடம் புதிய கடவுச்சீட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டவிரோத ஆட்கடத்தல் வலையமைப்பிற்கு குறித்த நபர் தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கையர்களை கனடாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடர்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அவரது கால்களுக்கு இலத்திரன்கள் பிரேஸ்லெட் ஒன்று போடப்பட்டு கடுமையான நிபந்தனை அடிப்படையில் வீட்டில் வசிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்தோடு, தேசிங்கராசன் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டு இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே தேசிங்குராசன் விடுதலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, இலங்கையர் ஒருவரை அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டில் தேசிங்குராசனுக்கு 15 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் அவர் தொடர்ந்தும் அதே குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மே மாதம் மீண்டும் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த இவர் எவ்வாறு இரண்டாவது தடவையாக கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும், தேசிங்குராசனுக்கு எவ்வாறு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பது குறித்து குடிவரவு அமைச்சர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...