16 17
ஏனையவை

முன்னாள் எம்.பி. சிறீரங்கா சி.ஐ.டியில் முன்னிலை

Share

முன்னாள் எம்.பி. சிறீரங்கா சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா (Sri Ranga Jeyaratnam) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (Criminal Investigation Department) பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் (Sujeewa Senasinghe) 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் தொடர்பான பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையில், இன்று சுஜீவ சேனசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வாகனம் தொடர்பில் செட்டிகுளம் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த போதிலும், குறித்த வழக்கு ஏற்கனவே முடிவுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த வாகனத்தை சுஜீவ சேனசிங்கவிடம் விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கோட்டை நீதவான், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னமும் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வழக்கை நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சிறீரங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...