vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
உலகம்ஏனையவைசெய்திகள்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம்

Share

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வரும் திமுகவினருக்கு நடிகை கஸ்தூரி காட்டமாக பதில் அளித்துள்ளார்.

சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர் விவகாரம் குறித்து பலரும் விமர்சனங்கள் செய்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் திமுகவை விமர்சித்தார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சுதந்திரத்திற்கு முன்னாடியே கட்டப்பட்ட நுழைவு வாயில். இத்தனை வருடம் கழித்து இன்று திமுக அரசின் கண்ணை உறுத்துகின்றது. மந்திரிக்குமாரி உள்ளிட்ட கலைஞரின் பல வெற்றிகளை தினம்தோறும் பறை சாற்றும் நினைவு வாயிலை விட..” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமானுடன் நடிகை கஸ்தூரி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து திமுகவினர் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில், “இந்த புகைப்படத்தை தான் மூன்று நாட்களாக தூக்கிட்டு அலைகிறார்கள் D stock மடசாம்பிராணிஸ்.

இது 4 வருடம் முன்னாடி நானே share பண்ண ஒரு சாதா selfie. இதில் பதற்றதுக்கு என்ன இருக்கு? நான் என்ன ஆர்ச் முன்னாடியா நின்று செல்ஃபி எடுத்திருக்கிறேன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த புகைப்படமானது 2019 -ம் ஆண்டு சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, 25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி பிறந்தநாள் வாழ்த்துகள் என கஸ்தூரி பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...