46 அகதிகளின் சடலங்களுடன் கன்டெய்னர்; மருத்துவமனையில் 16 பேர்!

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், கன்டெய்னரிலிருந்து 46 அகதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியாவில் ரயில்வே ட்ராக்குகளுக்கு அருகிலுள்ள பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் கன்டெய்னரில் பொலிஸாரால் அகதிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவ இடத்திலிருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த பொலிஸார் 46 அகதிகளை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்துப் தெரிவித்த தீயணைப்பு படை தலைவர் சார்லஸ் ஹூட், “

மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 12 பேர் பெரியவர்கள், நான்கு பேர் குழந்தைகள்”. அவர்களின் உடல் மிகவும் சூடாக இருந்ததாகவும், கன்டெய்னரில் தண்ணீர் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் பலர் கடந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, அதிபர் ஜோ பைடனின் குடியேற்றக் கொள்கைகள் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் ஆளுநராக கிரெக் அபோட், இது அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் மனித கடத்தலின் மிக மோசமான சம்பவங்களில் ஒன்று. அகதிகள் சட்டத்தை அமல்படுத்த மறுத்ததன் கொடிய விளைவுகளையே இவை காட்டுகின்றன” எனக் கூறியிருந்தார்.

vikatan 2022 06 6bd4fda9 e586 4fcb bc6b dc7b711f1867 WhatsApp Image 2022 06 28 at 8 38 29 AM

#WorldNews

Exit mobile version