ஏனையவை

இது நியாமான ஷோவ்வே கிடையாது! ஜோவிகா வெளியேற்றம் தொடர்பில் வனிதா ஆவேசம்

Share
Share

இது நியாமான ஷோவ்வே கிடையாது! ஜோவிகா வெளியேற்றம் தொடர்பில் வனிதா ஆவேசம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 62 நாட்களை முடித்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் இருந்தது போல கட்டினமான டாஸ்குகளும் கான்ட்ரோவர்சிகளும் இந்த சீசனில் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது.

இந்த சீசன் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வந்துள்ள வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

இவ்வாறு 62 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது.

இதை தொடர்ந்து, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜோவிகா வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜோவிகாவை வெளியேற்றியது நியாயம் இல்லை என வனிதா விஜயகுமார் கொந்தளித்துள்ளார். தற்போது குறித்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது. அதன்படி மேலும் அவர் கூறுகையில்,

‘Most unfair eviction.. ஜோவிகா கன்டென்ட் பிளேயர்.. பாயிண்ட் எடுத்து வைக்கிறாங்க..அவங்க மேல எந்தவொரு ரெட் மார்க்கும் கிடையாது.. அவள விட உள்ள எத்தனையோ பேர் சும்மா தான் இருக்காங்க..இல்ல ரொம்ப பண்ணுறவங்க இருக்கும் போது அவங்கள தூக்கலாம்.. இது நியாமான ஷோவ் கிடையாது.. இது என் பொண்ணு என்கிறதால நான் சொல்லல..’ என ஜோவிகாவின் eviction பத்தி பேசியுள்ளார் வனிதா.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...