2 24 scaled
ஏனையவை

கல்லூரிகள் திறக்கவிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து பல்கலைகளில் படு குழப்பம்

Share

கல்லூரிகள் திறக்கவிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து பல்கலைகளில் படு குழப்பம்

இங்கிலாந்தில் அடுத்த மாதம்வாக்கில் கல்லூரிகள் திறக்கவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்கள் பல பெரும் பணச்சிக்கலில் சிக்கும் மோசமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளன.

ஆகவே, அரசு பிரச்சினையில் தலையிடவேண்டும் என பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில், இன்னும் இரண்டு நாட்களில் பள்ளியிறுதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

அடுத்து பிள்ளைகள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பார்கள். ஆனால், பல பல்கலைக்கழகங்கள் மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.

அதாவது, முந்தைய அரசு, சர்வதேச மாணவர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.

பிரித்தானியாவில், உள்ளூர் மாணவர்களைவிட சர்வதேச மாணவர்கள் மிக அதிக அளவில் கல்விக்கட்டணம் செலுத்துவது வாடிக்கை. ஆக, அவர்களுடைய கல்விக்கட்டணத்தை நம்பித்தான் பிரித்தானியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன.

இப்போது சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் பல்கலைக்கழகங்களின் வருவாயில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதித்த அரசே, இப்போது பல்கலைக்கழகங்கள் நிதியுதவிக்காக அரசிடம் உதவி கோரக்கூடாது என கூறிவிட்டது.

ஆக, வருவாய் இல்லாததால் சில பல்கலைகள் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எதையுமே யோசிக்காமல், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட முந்தைய அரசின் நடவடிக்கைகள், இப்போது பிரித்தானிய பொருளாதாரத்தையே பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது என்கிறார்கள் சில பல்கலைகளின் துணைவேந்தர்கள்.

இதற்கிடையில், சில பல்கலைக்கழகங்களில் ஆட்குறைப்பு நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், பல்கலைக்கழகங்கள் என்பவை பெருமளவில் பணி வழங்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடியவையாகும். ஆக, பல்கலைக்கழகங்கள் இயங்காத நிலை உருவானால், பலர் வேலை இழக்க நேரிடும், மாணவர்களுக்கான செலவை நிர்வகிப்பதற்காக அரசு பெரும் தொகை செலவிடவேண்டி வரும்.

அது உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கும். மொத்தத்தில் அது அரசின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிட்டது முந்தைய அரசு.

 

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...