அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2 14

2012 ஆம் ஆண்டு கிரேக்க நிதி நெருக்கடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பிரதிவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் பொருளாதார சரிவுக்கான தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், கிரேக்க பத்திரங்களில் பொது நிதியை முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய வழக்கை அக்டோபர் 10 ஆம் திகதியன்று விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது, பிரதிவாதிகளுக்கு எதிரான ஆவணங்கள், அவர்களுக்கு கையளிக்கப்படும் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version