Macro Aedes aegypti Mosquito human blood
ஏனையவை

உங்களுக்கு கொசுக்கடி தாங்க முடியலையா? இதனை தடுக்க இதோ சில எளிய வழிகள்!

Share

பொதுவாக கொசுக்கள் ஒருவரைக் கடித்து இரத்தை உறிஞ்சுவது மட்டுமின்றி பல்வேறு ஆபத்தான நோய்களான மலேரியா, டெங்கு போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

கொசுக்கடி ஒருவருக்கு எரிச்சலூட்டுவதோடு, கடுப்பேற்றக்கூடியதாகவும் இருக்கும்.

இதனை ஆரம்பத்திலே தடுப்பது அவசியமாகும். அந்தவகையில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளை பார்ப்போம்.

  • சிறிது பூண்டை கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, அந்நீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்திடுங்கள். இதனால் பூண்டு வாசனை வீடு முழுவதும் பரவி, வீட்டிற்குள் கொசுக்களை வரவிடாமல் தடுக்கும்.
  • உங்கள் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் துளசி செடி தொட்டியை வைத்து வளர்த்து வந்தால், வீட்டிற்கு கொசுக்களை வரவிடாமல் தடுக்கலாம்.
  • எலுமிச்சையை இரண்டு பாதியாக வெட்டி, அதில் கிராம்புகளை சொருகி வைத்து, ஒவ்வொரு ஜன்னல் கதவுகளிலும் வைக்க வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதுடன், கொசுக்கடியில் இருந்தும் விலகி இருக்கலாம்.
  • வேம்பு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் கலந்து, கை, கால்களில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத்திற்கு கொசுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
  • ஒரு கப் நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஆங்காங்கு தெளித்திடுங்கள். இதனால் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீடு புத்துணர்ச்சி அளிக்கும் வாசனையுடன் இருக்கும்.
  • கற்பூரத்தை நீரில் போட்டு, அதில் சில கற்பூரங்களைப் போட்டு கொசுக்கள் அதிகம் உள்ள அறை அல்லது கொசுக்கள் வரும் பகுதியில் வைத்துவிடுங்கள்.
  • உங்கள் வீட்டைச் சுற்றி அல்லது கூரையின் மேல் நீர் குட்டைகள் இருந்தால், அங்கு சிறிது காபி தூளை தூவுங்கள். இதனால் கொசு முட்டை அந்நீரில் இருப்பின், அது தானாக மேற்பரப்பில் மிதந்து, ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.
  • உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் வருமாயின், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஃபீவர்ஃப்யூ, சிட்ரோனெல்லா மற்றும் கேட்னிப் போன்ற தாவரங்களை வளர்த்து வாருங்கள்.
  • டீ-ட்ரீ ஆயிலை சிறிது நீரில் கலந்து, சருமத்தில் மீது தடவிக் கொள்ளுங்கள். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்த எண்ணெய் கொசுக்களை விரட்டுவதில் சிறந்ததோடு மட்டுமல்ல, கொசுக்கடிக்கும் சிகிச்சை அளிக்கும்.

கொசுக்கள் வரும் வீட்டு ஜன்னல் பகுதியில் சிறிது ரோஸ்மேரியை மட்டும் வையுங்கள். இதனால் வீட்டிற்கு கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

 

 #mosquito  #home  #garden

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...