bl 30043 09062019200853
ஏனையவைவீடு - தோட்டம்

ஈ தொல்லை தாங்க முடியலையா? இதனை இலகுமுறையில் விரட்ட இதோ சில வழிகள்

Share

பொதுவாக ஈக்கள் ஆபத்தானது அல்ல ஆனால் அவை பல்வேறு நோய்த்தொற்றுகளை பரப்புகின்றன.

இதனை எளியமுறையில் கூட வீட்டில் இருந்து விரட்டலாம்.

அந்தவகையில் வீட்டில் ஈக்களை அகற்ற என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

  • ஒரு கிளாஸில் வடிகட்டாத ஆப்பிள் சிடார் வினிகரை கொஞ்சம் எடுத்து கொள்ளுங்கள். அந்த டம்ளரின் மேல் பகுதியை ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். ரப்பர் பேண்ட் கொண்டு நல்ல இறுக்கமாக கட்டியோ அல்லது செல்லோ டேப் கொண்டு ஒட்டிக் கொள்ளுங்கள். அந்த பிளாஸ்டிக் கவரின் மேல் ஒரு ஓட்டை போட்டு கொள்ளுங்கள். ஈக்களை பிடிப்பதற்கான பொறி இப்பொழுது ரெடியாகி விட்டது. ஆப்பிள் சிடார் வினிகரின் மணம் ஈக்களை ஈர்க்க ஆரம்பித்து விடும். இந்த ஈர்ப்பினால் ஈக்கள் தானாகவே அதனுள் போய் மாட்டிக் கொள்ளும். அதே நேரத்தில் அதில் போடப்பட்ட ஓட்டை சிறியது என்பதால் அதனால் வெளியே வரவும் முடியாது.
  • ஒரு சின்ன ஜாரில் வினிகரை ஊற்றி கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போதும். இப்பொழுது பேப்பரை ஒரு கோன் வடிவில் சுருட்டி அதனுள் பழத்துண்டை வைக்க வேண்டும். அதில் சிறிய துளை இருக்கிறமாதிரி வடிவமைத்து கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஈக்களை ஈர்த்து அதிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு பண்ணி விடும்
  • கொஞ்சம் பாலை எடுத்து அதில் 4 அவுன்ஸ் சர்க்கரையை(சுகர் ப்ரீ, சுகர் துண்டுகள் வேண்டாம்) சேர்த்து கொள்ளுங்கள். இதை ஒரு கடாயில் ஊற்றி நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள். முதலில் நுரைகள் வந்ததும் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து லேசாக கெட்டியாக வரும் வரை கிண்டவும். இது முடிந்ததும் இந்த கலவையை ஒரு பிளாஸ்டிக், ஸ்டீல் அல்லது செராமிக் பெளலில் ஊற்றி கொள்ளுங்கள். இதனால் ஈக்கள் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து எழுந்திருக்க முடியாதபடி மூழ்கிக் கொள்ளும்.
  • 3-4 டேபிள் வினிகரை ஒரு பெளலில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் டிஷ் சோப்பு துளிகளை சேர்க்க வேண்டும். சோப்புத் துகள்களை நன்றாக கலக்க வில்லை என்றால் இந்த முறை பலனளிக்காது. எனவே இதை நன்றாக கலக்கி பயன்படுத்துங்கள்.
  • உங்கள் பகுதியில் திறந்த சாக்கடைகள் இருந்தால் கொஞ்சம் தண்ணீரில் கொஞ்சம் ப்ளீச் பவுடரை கலந்து எல்லா இடங்களிலும் தெளித்து விடுங்கள். உடனே எல்லா ஈக்களும் அங்கிருந்து பறந்து சென்று விடும். இப்படி எளிதான முறையில் ஈக்களை விரட்டிடலாம்.
  • ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் ரெட் வொயினை எடுத்து கொள்ளுங்கள். இதன் மணம் அப்படியே ஈக்களை தானாகவே ஈர்த்து விடும். அதிலேயே ஈக்கள் மூழ்கி விடும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...