மனிதக் கடத்தலை ஒழிக்க இலங்கையின் புதிய வியூகம்: 2026 – 2030 தேசிய மூலோபாயத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

images 5 3

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் பலமோர் பணிச்சட்டகத்தின் (Palermo Protocol) கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேசப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான புதிய தேசிய மூலோபாயச் செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மனித வியாபாரத்தைத் தடுக்கும் நோக்கில் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘மனித வியாபாரத்திற்கு எதிரான தேசிய செயலணி’, பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றி வருகின்றது.

2021 – 2025 ஆம் ஆண்டுக்கான தற்போதைய மூலோபாயத் திட்டத்தின் காலம் 2025 டிசம்பர் 31 உடன் முடிவடைகின்றது. இதனால், அடுத்தகட்டத் திட்டமிடல் அவசியமாகியது.

புதிய செயல்திட்டம் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டுடன் பின்வரும் நான்கு தூண்களின் அடிப்படையில் (4P’s Strategy) வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் மூலம் கடத்தல்களைத் தடுத்தல். பாதிக்கப்பட்டவர்களுக்கு (குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு) முறையான மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பை வழங்குதல்.

குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல். உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

பாதுகாப்பு அமைச்சராகக் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த இந்த 2026 – 2030 ஆம் ஆண்டுக்கான தேசிய மூலோபாயச் செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. இது இலங்கையில் மனிதக் கடத்தல் மற்றும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

 

 

Exit mobile version