விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7, மற்ற சீசன்களை காட்டிலும் நல்ல என்டர்டைன்மென்ட் ஆகவே இருந்தது. அதிலும் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த போது, சுவாரசியம் கூடுதலாகவே இருந்தது. அதிலும் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் தந்தை மிகவும் அடக்கமாகவே நடந்து கொண்டார்.
அவருக்கு தெரியாது அர்ச்சனா தான் வின்னர் என்று. அதோடு அர்ச்சனா மற்றும் பூர்ணிமா இருவரின் குடும்பத்தினர் ஒன்றாக ஒரே காரில் அமர்ந்து தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். போட்டியாளர்களின் குடும்பமே ஒன்றாக சேர்ந்து வரும்போது, வீட்டிற்குள் இருக்கும் அர்ச்சனாவும் மற்ற போட்டியாளர்களுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். கமல் தான் இந்த சீசனை கரெக்டா வழி நடத்தினார், இல்லையென்றால் பயங்கர சொதப்பலாகி இருக்கும். மேலும் வீட்டில் இருந்த போட்டியாளர்களில் 40 சதவீதம் பேர் மாயாவின் நண்பர்கள் என்பதால் தான் அவருடைய சவுண்ட் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
ஃபைனல் லிஸ்டில் இருந்த தினேஷ், விஷ்ணு இருவரும் நாள் நெருங்க நெருங்க ரொம்பவே சோகமாகிவிட்டனர். கடைசி வாரத்தில் எலிமினேட் செய்த போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது, பூர்ணிமா- மாயா இருவரின் கொஞ்சலுக்கு குறைச்சல் இல்லாமல் இருந்தது. விஜய் வழக்கம்போல் ஜால்ரா தட்டினார். விச்சு எலிமினேட் ஆகி வெளியே போனதுக்கு அப்புறமும் கெஸ்டா வந்தப்ப கூட ஸ்டிட் ஆஃபீஸராகத்தான் இருந்தார்.
இந்த சீசனின் ஐந்து ஃபைனல் லிஸ்ட் ஆன மணி, மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் ஆகிய ஐந்து பேருக்கும் விஜய் டிவி ஸ்பெஷல் கிப்ட் ஆக சம்பளத்துடன் கூடுதலாக 5 லட்சத்தை கொடுத்துள்ளது. இப்போது மணி புதிதாக பெங்களூரில் டான்ஸ் ஸ்கூல் துவங்கியிருக்கிறார். மணி- ரவீனா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதல் பறவையாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு இதற்கு முன்பு என்கேஜ்மென்ட் எல்லாம் ஆகல. அவர்கள் குடும்பத்திற்கும் இவர்களது லவ் தெரியாது. ஆனால் மணி உடைய அம்மா, ரவீனாவின் அம்மாவிடம் தொலைபேசி மூலம் அழைத்து பேசியபோது, ‘அவங்க வெளியில வந்து முடிவெடுக்கட்டும்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டாராம். மேலும் மணியின் அண்ணன் மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து, தன்னுடைய சித்தப்பா மணியின் கண்ணீரைத் துடைத்த தருணம் ரசிகர்களை நெகிழ வைத்தது.
அதோட மாயாவின் அக்கா கிராண்ட் பினாலே அன்று முதல் வரிசையில் உட்கார்ந்து மாயாவை என்கரேஜ் செய்தார். ஆனால் மாயா எலிமினேட் ஆன பிறகு, அந்த நொடியே அங்கிருந்து கிளம்பி விட்டார். அதேசமயம் அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகி இருப்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த யாருமே இதுவரை டைட்டிலை தட்டித் தூக்கவில்லை, இதுதான் முதல் முறை என்பதும் இந்த சீசனின் ஸ்பெஷல்.
- big boss 7 yesterday episode
- bigg boss 7
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 winner
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 today episode
- bigg boss tamil season 7 today full episode
- bigg boss title winner season 7
- bigg boss unseen tamil season 7