புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும், அவரது கணிப்புகள் உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. 1996 ஆம் ஆண்டு தனது 85வது வயதில் காலமான பாபா வங்கா, இறந்த பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் உலகின் எதிர்காலத்திற்காகக் கூறியதாக நம்பப்படும் கணிப்புகள் வெளியாகிப் பேசப்படுகின்றன.
பாபா வங்கா பல உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். இது மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர் கணித்துள்ளார்.
அவரை ஆய்வு செய்பவர்கள் கூறியுள்ளதன் படி, பாபா வங்கா அடுத்த ஆண்டான 2026 இல் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்துக் கணித்துள்ளார்.2026 ஆம் ஆண்டில் உலகப் போர் 3 (World War 3) தொடங்குவதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே பதற்றம் மிக அதிகமாகும் என்றும், குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா-தைவான் போன்ற நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் உச்சத்தை எட்டும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்தப் போரில் மேற்கு நாடுகள் அழிவைச் சந்திக்க நேரிடும் என்றும், கிழக்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.