7 39
இலங்கைஏனையவைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு : வெளியான வர்த்தமானி

Share

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு : வெளியான வர்த்தமான

ஜனவரி 2025 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடைமுறை குறித்து புதிய வர்த்தமானி வெளியாகியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) 21.12.2024 திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) 2024 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இந்த புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, வறிய குடும்பங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உதவித்தொகை 8500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை 17,500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நலன்புரிப் பலன்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கான சமூகப் பிரிவுகளில், 480,000 குடும்பங்களுக்கு மாதாந்த நல உதவித்தொகை 5,000 மற்றும் 17,000 ரூபா வழங்கப்படும்.

960,000 வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா நலன்பரி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இழப்பீட்டு காலத்தை 31.03.2025 வரை நீடித்துள்ளது.

அதற்கமைய, 2024 மே மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே பலன்களை பெற்று, பல்வேறு காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பயனாளிகளுக்கும், மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்து தற்போது பரிசீலனைக்கு உள்ளான விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் தகைமையின் அடிப்படையில் இம்மாதம் 31ஆம் திகதி வரையில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...