ஏனையவை

அமைச்சரவையில் கிழக்குமாகாணத்தை புறக்கணித்த அநுர அரசு

Share
1 55
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்(anura kumara dissanayake) இன்று (18) நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணம்(eastern province) புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அமைச்சர் பதவிகளை மேல் மாகாணம் கொண்டுள்ளது. இதன்படி, எண்ணிக்கை ஆறு எனவும், தென் வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு தலா ஒரு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரன் நீண்டகாலமாக வடமாகாணத்திற்கான கட்சியை ஒழுங்கமைத்து வருவதால் இந்த நியமனம் வடக்கிற்கான நியமனமாகவே கருதமுடியும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவைக்கு அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் பிரதி அமைச்சர்களை நியமித்து அந்த வெற்றிடத்தை நிரப்பப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த அமைச்சரவையில் குறிப்பிடத்தகுந்த விடயமாக , தமிழ்பிரதிநிதித்துவத்திற்கு, ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டாலும், முஸ்லிம் சமூகத்திற்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...