அமரன் 20 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

9 33

அமரன் 20 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது சிவகார்த்திகேயனின் அமரன்.

சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையின் தி பெஸ்ட் படமாக அமைந்துள்ள அமரன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை, கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் நாளில் இருந்தே அமரன் படத்தின் வசூல், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வந்தது.

3 நாட்களில் ரூ. 100 கோடி, 10 நாட்களில் ரூ. 200 கோடி என ஒவ்வொரு வசூல் சாதனையாக படைத்து வந்த அமரன் படம், தற்போது ரூ. 300 கோடியையும் கடந்துள்ளது.

ஆம், உலகளவில் 20 நாட்களில் ரூ. 302 கோடிக்கும் மேல் அமரன் படம் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 145 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Exit mobile version