17 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Anura Kumara Dissanayake 2

17 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக அமைந்துள்ளது அமரன். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த இப்படம் தீபாவளிக்கு சரவெடியாக வெடித்தது.

கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்திருந்தார்.

இவர்கள் இருவரின் நடிப்பும் படத்தை மக்கள் மனதில் இடத்தை பிடிக்க காரணமாக மாறியது. முதல் நாளில் இருந்த அமரன் படத்தின் வசூல் தொடர் சாதனைகளை படைத்தது.

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி, 10 நாட்களில் ரூ. 200 கோடி என பட்டையை கிளப்பி வரும் அமரன் படம் 17 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 17 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 284 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 139 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version