கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சர்ஜரி…. எப்போது?

Aishwarya Rai Bachchan 1

எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழக மக்களுக்கு எப்போதுமே உலக அழகி என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராய் தான் என மறைந்த நடிகர் விவேக் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.

அவர் சொன்னதை கண்டிப்பாக மக்களும் ஏற்றுக்கொள்வார்கள், அந்த அளவிற்கு ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டவர் ஐஸ்வர்யா ராய்.

இப்போதெல்லாம் அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை, மாறாக சில நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் என மட்டும் கலந்துகொண்டு வருகிறார்.

அண்மையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.

இந்த முறை கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா கையில் கட்டுடன் பங்குபெற்றுள்ளார், இதனால் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் புலம்பி வந்தார்கள்.

நடிகை ஐஸ்வர்யாவிற்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கேன்ஸ் விழாவை முடித்துக்கொண்டு மும்பை திரும்பியதும் நடிகை ஐஸ்வர்யாவுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version