நடிகை சமந்தா கொரோனா தொற்றினால் பலி!

samantha

இலங்கையின் தொலைக்காட்சி நாடக தொடர் பிரபல நடிகை சமந்தா ஏபாசிங்க கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமந்தா ஏபாசிங்க பிரபல சிங்கள திரைப்படம் மற்றும் அசல்வெசியோ, தத்கெகுலு பாலா உள்ளிட்ட பழைய நாடகங்கள் பலவற்றில் இவர் நடித்துள்ளார்.

இதேவேளை, மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்று முன்தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,102 ஆக அதிகரித்துள்ளது.

 

Exit mobile version