ஏனையவை

தென்னிலங்கையில் அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

Share
tamilni 340 scaled
Share

தென்னிலங்கையில் அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையின் பெலியத்தை நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல அரசியல்வாதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அபே ஜனபல பக்‌ஷய எனப்படும் கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த பொதுத் தேர்தலின் போது சிங்கள பௌத்த வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய இக்கட்சி, கடைசியில் ஒரு தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொண்டது.

சர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சமன் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடும் சர்ச்சையும் மோதல்களும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக அதுரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றம் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பெலியத்தை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கட்சியின் தலைவர் சமன் பெரேரா , இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த இன்னும் நால்வரும் குறித்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தென்னிலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழுவொன்று வெள்ளை டிபென்டர் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...