26 6958b2e786c0e
ஏனையவை

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை: 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் கடற்கரையில் அனுஷ்டிப்பு!

Share

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவர்கள் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக இந்த நினைவேந்தல் நேற்று (02) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்கள் காந்தி சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு, சுடரேற்றி மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, திருகோணமலை கடற்கரையில் தங்கியிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இந்தப் படுகொலைச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய உறவினர்கள், சர்வதேச சமூகம் தமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர்.

 

 

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...