ஏனையவைசெய்திகள்

கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சி.எஸ்.கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்?

Share

கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சி.எஸ்.கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்?

இந்தியா (India) – அவுஸ்திரேலியா (Australia) இடையே டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தொடரின் பாதியிலேயே நேற்றையதினம் (18.12.2024) அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் அஸ்வினை அணியில் எடுக்காததே அவர் ஓய்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ”எனக்கு மிகப்பெரும் வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபிறகு வீடு திரும்பியதுபோது இதேபோல் வரவேற்பு இருந்தது.

ஓய்வு முடிவை அறிவித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.சில நாட்களாகவே ஓய்வு குறித்த எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. நிறைய வீரர்களுக்கு ஓய்வு முடிவை அறிவிப்பது கவலையாக இருக்கும்.

அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் எனக்கு இது ஒரு பெரிய நிம்மதி மற்றும் திருப்தியை தருகிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் ஓய்வு பெற்றுள்ளார். எனக்குள் இருக்கும் கிரிக்கெட் வீரர் இன்னும் ஓய்வு பெறவில்லை. என்னால் முடிந்தவரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்.

ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக விளையாட போகிறேன். டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். 30 ஆண்டுகளாக கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகிறேன்.

19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீரர்களிடம் கிரிக்கெட் அனுபவம் பயிற்சி, ஆலோசனையை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...