22 7
ஏனையவை

மட்டக்களப்பு – கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது

Share

மட்டக்களப்பு – கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது

விபத்து ஒன்று தொடர்பில் கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செங்கலடி கரடியனாறு பிரதான வீதி காயங்குடா பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி செலுத்திய ஜீப்வண்டி நேற்றையதினம் மோதியுள்ள நிலையில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன இடமாற்றம் பெற்றுச் செல்கின்றதையடுத்து அவருக்கு இரவு போசனம் வழங்கி பிரியாவிடை செய்யும் நிகழ்வு பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

அதில் மாவட்டதிலுள்ள காவல்நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரவு போசன நிகழவுக்கு கரடியனாறு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி அவருக்கு சொந்தமான ஜீப்வண்டியில் தனியாக சென்று இரவு 10.00 மணியளவில் மீண்டும் கரடியனாறு காவல்நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காயங்குடா பகுதியில் பிரதான வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார்.

இதில் பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற காவல்துறை பொறுப்பதிகாரியும் செங்கலடி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு இன்று (8) காலை சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

இதன்படி, குறித்த விபத்து தொடர்பாக கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்து அவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...