7 39
ஏனையவை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர எழுத்து மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சுமார் 80 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து நேற்றைய தினம் (20) வெளியேறியுள்ளனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் தொடர்ந்தும் தங்குவதற்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற கடந்த 14 ஆம் திகதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்கும் தகுதி உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க இந்த நாட்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருபு்பு தொகுதியில் சுமார் 110 வீடுகள் உள்ளன.

அதன் அடிப்படையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக முதலில் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் வரிசையிலேயே வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...