4 41
ஏனையவை

ஈச்சங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது

Share

ஈச்சங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது

வவுனியா (Vavuniya) – ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (19.11.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 03 ஆம் திகதி வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈச்சங்குளம் காசவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது

கைதுசெய்யப்பட்டவர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காசவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் காசவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...