ஏனையவை
மகிந்தவின் கனவு நனவாகியது – நாமல் ராஜபக்ச
மகிந்தவின் கனவு நனவாகியது – நாமல் ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கனவு தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் நனவாகியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (17.11.2024) வெளியிட்ட கடிதம் ஒன்றில் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள், வடக்கு மக்களை கவரக்கூடிய சூழலை உருவாக்குவது மகிந்த ராஜபக்சவின் கனவாக இருந்தது.
தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் அந்த கனவு நனவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்திற்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடமளிக்காது என நாமல் ராஜபக்ச வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மெதகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒத்துழைப்பு வழங்க அரசாங்கத்துடன் ஒன்றிணைய வேண்டிய அவசியம் கிடையாது என்றும் சானக மெதகொட குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இந்த மாற்றம் தேசிய நல்லிணக்கத்துக்கான சிறந்த முன்னேற்றமாகும்
காலியில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.